கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி

Update: 2023-06-02 20:06 GMT

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா தேவி (வயது 33). இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என்று இருந்தது. இதையடுத்து அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்ட போது ரூ.2 லட்சம் கடன் தருகிறோம். அதற்கு ஆவணங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பல தவணைகளில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கட்டி உள்ளார். ஆனால் கடன் தொகை கிடைக்கவில்லை. பின்னர் சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்