வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

Update: 2023-02-27 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மேலூர் ஒசாஹட்டி கிராமத்தை சேந்தவர் ஒரு நபர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் எங்கள் பகுதியை சேர்ந்த 15 பேரிடம் பணம் வாங்கினார். ஆனால் இதுவரை வேலை பெற்று தரவில்லை. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தோம். அப்போது பணத்தை திரும்ப வழங்குவதாக போலீசாரிடம், அந்த மோசடி நபர் எழுதி கொடுத்தார். ஆனால் பணத்தை திரும்ப வழங்கவில்லை. வட்டிக்கு வாங்கி அவரிடம் பணம் கொடுத்தோம். எனவே விரைவாக அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்