முதலீடு திட்டத்தின் மூலம் இரட்டிப்பாக தருவதாக கூறிரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது

முதலீடு திட்டத்தின் மூலம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-03 18:45 GMT


விழுப்புரம் கே.கே.சாலை மணி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ரமேஷ் (வயது 52). இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனியார் இன்சூரன்சில் மேலாளராக பணியாற்றி வரும் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் (42) மற்றும் திருபுவனையைச் சேர்ந்த ஸ்டாலின் (47) ஆகிய இருவரும் அணுகி முதலீடு திட்டம் ஒன்று இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் 300 நாட்களுக்கு தினமும் ஒரு சதவீதம் பணம் திரும்ப பெறலாம் என்றும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சுப்பிரமணி ரமேஷ், ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதேபோல் சுப்பிரமணி ரமேஷின் நண்பர்கள் ஆன்டனி ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், திருஞானம் ரூ.6 லட்சமும், செந்தில்குமார் ரூ.6 லட்சமும், சுப்பிரமணி ரமேசின் மனைவி பத்மாவதியின் தோழியான சுகந்தி ரூ.7 லட்சத்து 46 ஆயிரமும், இவர்கள் உள்பட மேலும் சிலரிடம் இதுபோன்று மொத்தம் ரூ.40 லட்சத்து 26 ஆயிரத்தை ரவிக்குமார், ஸ்டாலின், ரவிக்குமார் மனைவி கிரகலட்சுமி ஆகிய 3 பேரும் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே ரவிக்குமார், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கிரகலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்