வங்கியில் கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி

வங்கியில் கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-17 20:02 GMT

திசையன்விளை:

திசையன்விளை ஆர்.என்.டி. காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் வள்ளிநாயகம் (வயது 40). இவர் அப்புவிளையைச் சேர்ந்த வசந்த் மனைவி மாலதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.25 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மாலதி தான் கொடுத்த பணத்தை திரும்ப கோட்டு வள்ளிநாயகம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வள்ளிநாயகம், அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் மாலதியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாலதி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்