சென்னையில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி... பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
சென்னையில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக உள்ள தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இயங்கி வந்த தனியார் நிறுவனம், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதிக வட்டி தருவதாகக் கூறி, ஒவ்வொரு நபர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து பல கோடி ரூபாய் வரை பணத்தை பெற்றதாகவும், 2 மாதங்கள் மட்டுமே வங்கி கணக்கில் வட்டி செலுத்திய நிலையில், அதன் உரிமையாளர்கள் தலைமறைவானதாகவும் சொல்லப்படுகிறது.
ஹிஜாவு அசோசியேட்ஸ் தனியார் நிறுவனம் உரிமையாளர் செளந்தர்ராஜான், இயக்குனர் அலெக்சாண்டர் மற்றும் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களை தமிழக போலீசார் கைது செய்ய வலியுறுத்தியும், பணத்தை திருப்பி தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.