டிரைவரிடம் காரை வாங்கி மோசடி

டிரைவரிடம் காரை வாங்கி மோசடி

Update: 2022-12-17 18:45 GMT

காட்டூர்

கோவை சவுரிபாளையம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 54). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் ஒரு காரை சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்ட முடிவு செய்தார். இதனையடுத்து வங்கியில் கடன் பெற்று பழைய காரை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். அப்போது தனது சக டிரைவர்கள் மூலம் அவருக்கு கோவை கணபதியை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (34) என்பவர் அறிமுகமானார். அவர் மாரியப்பனிடம் உங்களது காரை என்னிடம் கொடுங்கள் நான் வாடகைக்கு ஓட்டி உங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தருகிறேன் என கூறி கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் காரை வாங்கினார்.


சில மாதங்கள் வரை மாத வாடகை தொகை ரூ.15 ஆயிரத்தை ஜெகதீஷ்வரன் சரியாக கொடுத்தார். அதன்பின்னர் மாத வாடகை கொடுக்க வில்லை. காரையும் திருப்பி ஒப்படைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஜெகதீஷ்வரன் தலைமறைவானார். இது குறித்து மாரியப்பன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ஜெகதீஷ்வரன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்