திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் தங்க காசு-பணம் மோசடிவாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் தங்ககாசு மற்றும் பணத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-22 20:03 GMT


கம்மாபுரம், 

விருதுநகர் மாவட்டம் தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் நதியா (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நதியா சிவகாசியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவரின் உறவினர் மூலம் நதியாவுக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள க.புத்தூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தவமணி (31) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நதியாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் ரொக்கம், 17 பவுன் தங்க காசுகளை தவமணி வாங்கியுள்ளார். இதையடுத்து நதியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தவமணியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் தவமணிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றிய தகவல் நதியாவுக்கு தெரியவந்தது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தவமணியிடம் சென்று தான் கொடுத்த பணம் மற்றும் தங்க காசுகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் அதனை கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து நதியா கடந்த டிசம்பர் மாதம் கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தவமணியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கா.புத்தூரில் உள்ள கோவிலுக்கு வந்த தவமணியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சம் தங்க காசு மற்றும் பணத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்