வேலை வாங்கி தருவதாக ரூ.75 ஆயிரம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.75 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-05 18:45 GMT

காரைக்குடி

குன்றக்குடி அருகே வைரவன்பட்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரி (வயது 29). இவரிடம் கற்பக மூர்த்தி (34) என்பவர் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 ஆயிரம் பெற்றதாகவும், ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை எனவும், அழகேஸ்வரி பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பக மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்