பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-27 18:06 GMT


சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஆசாரி தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது29). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அறிமுகமான நபர் ஒருவர் தன்னுடைய பெயர் சங்கர் என்றும் தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவர் வங்கியில் நகை ஏலத்திற்கு வருவதாகும் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் 2 பவுன் நகை வாங்கலாம் என்று கூறி உள்ளார். ராஜேஸ்வரி அந்த நபருடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வாசலில் வந்து தன்னுடைய தந்தை மூலமாக ரூ.30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் நகை வாங்கி தருவதாக கூறி தலைமறைவாகிவிட்டார் இது தொடர்பாக ராஜேஸ்வரி சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்