மில் தொழிலாளர்கள் உள்பட 14 பேர் படுகாயம்

Update: 2022-06-12 15:36 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் இருந்து மில் வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு நோக்கி மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யன்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஸ் (வயது 39) என்பவர் ஓட்டினார்.

இதேபோல் பட்டிவீரன்பட்டியில் இருந்து சித்தரேவு நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. பட்டிவீரன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது டிராக்டரும், மினி பஸ்சும் மோதின. இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் சதீஸ் (39), மில் தொழிலாளர்கள் கங்கா (30), மாரிமுத்து (25), தனம் (38), விஜயலட்சுமி (32) பேச்சியம்மாள் (50), சித்ரா (29), சுதா (30) முனியம்மாள் (22), பாண்டியராஜ் (60), திலகவதி (25), ஜேசுதாஸ் (30), சுமதி (30) மற்றும் சித்தரேவை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்