கொலையாளிகளை பழிவாங்க திட்டமிட்ட 4 பேர் கைது
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொலை தொடர்பாக கொலையாளிகளை பழிவாங்க திட்டமிட்ட 4 பேர் கைது ெசய்யப்பட்டனர். மேலும் 11 பேரை போலீசாா் ேதடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொலை தொடர்பாக கொலையாளிகளை பழிவாங்க திட்டமிட்ட 4 பேர் கைது ெசய்யப்பட்டனர். மேலும் 11 பேரை போலீசாா் ேதடி வருகிறார்கள்.
4 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் இருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்தனர்.அதில் வைத்தீஸ்வரன்கோயில் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது23), மயிலாடுதுறை குமரக்கட்டளைத் தெருவைச் சேர்ந்த சத்யநாதன் (19), தருமபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (21), கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த அபினாஷ் (22) ஆகிய 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 11 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
குண்டா் சட்டம்
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசாா் நடத்திய விசாரணையில் கிைடத்த தகவல்கள் வருமாறு:-
மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் திவாகர், ரஞ்சித், சந்துரு, அஜித்குமார், ஹரிஷ் ஆகிய 5 பேர் மட்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
11 பேருக்கு வலைவீச்சு
இந்தநிலையில் கண்ணனை கொலை செய்தவர்களை பழி வாங்க ராகுல், சத்யநாதன், ஹரிபிரசாத், அபினாஷ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைதான 4 பேரையும் போலீசார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சந்திரமோகன், ரஞ்சித், கட்டபொம்மன், அருண்பாண்டியன், மணி, அன்பரசன், சதீஷ், மணிகண்டன், புதுக்கோட்டையைச் சேர்ந்த கபிலன், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.