குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-09 20:35 GMT


புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்தூர் வேதியங்குடியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் முத்து என்ற முத்துராமன் (வயது 21). தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதம்பை வடக்கு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் விஜய் (28). கும்பகோணம் தாலுகா செக்காங்கன்னி தெருவை சேர்ந்த ஜான்பென்னி மகன் பிரவீன்குமார் (19). கும்பகோணம் முத்துபிள்ளை மண்டபம் ஒத்த தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் பாலாஜி (19). இவர்கள் 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.இதையடுத்து முத்துராமன், விஜய், பிரவீன்குமார், பாலாஜி ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் குண்டர் சட்டத்தில் முத்துராமன், விஜய், பிரவீன்குமார், பாலாஜி ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்