சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே தேவூரில் சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூரில் சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே தேவூர் வ.உ.சி. தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தேவூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி இளவரசி (வயது 33) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதே பகுதியில் சாராயம் விற்பனை செய்த இளவரசி கணவர் ஜெயபிரகாசை பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி இளவரசி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே பகுதியில் சாராயம் விற்ற மணி மனைவி செல்வி (45) மற்றும் அவரது மகன் விஜய் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
---