கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-30 18:16 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளத்தொடர்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் திருத்தங்கல் பாண்டியன் காலனியை சேர்ந்த காளிராஜன்(28) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காளிராஜன் கள்ளத்தொடர்பு தொடர்பாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டியை சேர்ந்த ராமசாமி (வயது 54), பனையூரை சேர்ந்த ஆறுதல் ராஜா(38), மம்சாபுரம் பொன்ராஜ்(37), ராஜபாளையம் பெரியகடை பஜார் பகுதியை சேர்ந்த அழகர்(47) |ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் 3 பேரை தேடி வருகின்றனர். கொலை சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்