புதிய நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

செட்டிக்குறிச்சி கிராமத்தில் புதிய நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-07-29 14:30 GMT

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் செட்டிகுறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த ராம்தாஸ் நகர் காலனியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்ட கோவில் கட்டிடத்தை கயத்தாறு யூனியன் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரக வளர்ச்சிபிரிவு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. யூனியன் தலைவர் புதிய நூலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமிகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அ.ம.மு.க. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், யூனியன் வட்டார வளர்ச்சி ஆனையாளர் அரவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்