நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
பில்லாளியில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளிகள் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிட அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. .இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)பாத்திமா ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்து கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சவுந்தரராஜன்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.