கருமடையூரில் புதிய அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

கருமடையூரில் புதிய அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;

Update: 2023-07-14 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சி கருமடையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்