ரூ.33¼ கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

சின்னமனூர் நகராட்சியில் ரூ.33¼ கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-03-13 19:00 GMT

சின்னமனூர் நகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.28 ேகாடியே 58 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகர்ப்புற விரிவாக்க சாலைகளில் புதிய தார்சாலை, ரூ.4 கோடியே 49 லட்சத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான எள்ளுக்கட்டை சாலையை சீரமைக்கும் பணி, மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் ரூ.33 லட்சத்தில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு முன்னிலை வகித்தார்.

விழாவில் எம்.எல்.ஏ. பேசுகையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிக நிதிகளை ஒதுக்கி தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் கணேஷ், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குரு இளங்கோ, மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்ட இளைஞரணி பஞ்சாப் முத்துக்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்