மாறாந்தையில் ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

மாறாந்தையில் ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாறாந்தை பிள்ளையார் கோவில் அருகில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாறாந்தை பஞ்சாயத்து தலைவர் மீனா சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் சௌ.ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சேர்மத்துரை, ஆலங்குளம் நகர செயலாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்