மார்க்கெட் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
சங்கரன்கோவிலில் மார்க்கெட் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹரிகரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் பட்டு நூல் கழக சேர்மன் மணிவண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, மார்க்கெட் சங்க நிர்வாகி கணேசன், யோசேப்பு, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், கே.எஸ்.எஸ்.மாரியப்பன், கேபிள் கணேசன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, அரசு ஒப்பந்ததாரர் நிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.