வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

கீரமங்கலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாit அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்;

Update:2023-10-07 23:45 IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 12 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, செரியலூர் இனாம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஜியாவுதீன், காசிம் புதுப்பேட்டை ஜமாத் தலைவர் நஜ்முதீன், புள்ளான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பேரூராட்சியில் உள்ள 7, 9 ஆகிய வார்டில் கருப்பர் கோவில் மற்றும் மேற்பனைக்காடு பிரிவு சாலை அருகில் என ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டிலும், காசிம் புதுப்பேட்டை 1-வது வார்டில் பள்ளிவாசல், கட்டபொம்மன், அருணாச்சலம் கித்து வாய் ஆகிய தெருக்கள் அடங்கிய சாலைகளுக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து புள்ளான்விடுதி ஊராட்சியில் வரதராஜ பெருமாள் கோவில் உள் வளாகத்தில் பேவர் பிளாக் மற்றும் 2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசிம் புதுப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி வழங்கினார். பின்னர் அவரும், தி.மு.க.வினரும் ஆலங்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வெங்கடாசலம் 7-ம் ஆண்டு குரு பூஜை நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் கரம்பக்காட்டில் லிட்டில் பாய்ஸ் 7-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவளர் மற்றும் கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்