பொய்கை ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சாலை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

பொய்கை ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சாலை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பொய்கை பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்