வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவன நாள் கொண்டாட்டம்

வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2022-07-17 18:29 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 94-வது ஆண்டு நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதில், மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் பற்றியும், வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக கூறினார். இதனைதொடர்ந்து முன்னோடி விவசாயிகளான நாகராஜ், அசோக்குமார், சுஜாதா உள்ளிட்டோர் கரும்பு சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம், காளான் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல், நிலக்கடலை சாகுபடி, பருத்தி சாகுபடி, முந்திரியில் மதிப்பு கூட்டல், மண்புழு உரம், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது, நிலக்கடலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு மூலம் தங்களது ஆண்டு வருமானம் இருமடங்காக மாற்றியது பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் உரையாற்றினார். இதனை கால்நடை தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் தமிழாக்கம் செய்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். முன்னதாக தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா வரவேற்றார். முடிவில் உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை, பூச்சிக்கட்டுப்பாடு, நவீன எந்திரங்கள், பாரம்பரிய விதைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்