பல்லடம்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் திகைத் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் மீது மை வீசி அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வட்டாரத் தலைவர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மைனர் தங்கவேல் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம் கலந்துகொண்டு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெறுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.