முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை நல்லடக்கம்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது

Update: 2022-09-21 09:51 GMT

மதுரை,

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் மதுரை திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 76.

சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் மு.மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 1977, 80, 84, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

* 1991 முதல் 1998 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா.

* 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.

* 2006-ல் அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

* அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.

* பெரியகுளம் எம்.பி. தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துறை மந்திரியாக இருந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்