முன்னாள் அரசு வக்கீல் படம் திறப்பு விழா

நெல்லை கோர்ட்டில் முன்னாள் அரசு வக்கீல் படம் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2023-10-21 19:01 GMT

மறைந்த முன்னாள் அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் படம் திறப்பு விழா, நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, படத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசுகையில், நெல்லை வக்கீல் சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இங்கு வக்கீலாக பணிபுரிந்த பலர் மாவட்ட நீதிபதியாகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் சிறப்பான முறையில் பணியாற்றி பெருமை சேர்த்து உள்ளனர். அரசியலில் உயர்ந்த இடத்திற்கும் வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற ராமகிருஷ்ணன் போன்ற மூத்த வக்கீல்கள் முன்னோடியாக திகழ்ந்தனர். இந்த மூத்த வக்கீல்களைப் போன்று தற்போதைய வக்கீல்களும் சட்ட புத்தகங்களை அதிகம் படித்து, நல்ல பயிற்சி பெற்று தங்களுடைய வாத திறமைகளை எடுத்து வைத்து உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்'' என்றார்.

விழாவில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், கந்தசாமி, வக்கீல்கள் மங்களா ஜவஹர்லால் திருமலையப்பன், பாலகணேசன், செல்வசூடாமணி உள்பட பலர் கலந்துகொண்னடர்.

Tags:    

மேலும் செய்திகள்