ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவு - திருச்சி விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

திருச்சி விமான நிலையத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவு ஒட்டி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.;

Update: 2022-07-09 03:21 GMT

திருச்சி,

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவை தொடர்ந்து தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்