முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினரானார்

முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினரானார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2022-10-18 19:33 GMT


முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினரானார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் டி.ராமசாமி (வயது 66). இவர் 2000 முதல் 2017-ம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார்.

தேசியக்குழு உறுப்பினராக தேர்வு

இந்நிலையில் 1996-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் அதன் பின்னர் தற்போது மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து முடிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் தேசிய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்