சொத்து பிரச்சினையில் தாக்கியதாகமுன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
சொத்து பிரச்சினையில் தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் (வயது 72). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகங்கை தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவரது தங்கை குணவதி (62). சம்பவத்தன்று குணவதி பூர்வீக சொத்து சம்பந்தமாக அண்ணன் வீட்டிற்கு சென்று கேட்டாராம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் 2 பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாக குணவதி சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் குணவதி தங்களை தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மனைவி ஈஸ்வரி மற்றொரு புகார் செய்தார். சிவகங்கை நகர் போலீசார் 2 புகார்கள் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.