மாணவி நந்தினிக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிதி உதவி

சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. நிதி உதவி அளித்தார்.

Update: 2023-05-11 19:00 GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் பொன் சீனிவாசன் தெருவை சேர்ந்த தச்சுத்தொழிலாளி சரவணக்குமார் மகள் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார்.

பின்னர் மாணவி நந்தினி, அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து மாணவி நந்தினிக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சால்வை அணிவித்து ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவுரையின்படி, மாணவி நந்தினிக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடைய லட்சியம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்