முன்னாள் தி.மு.க. பிரமுகர் காருக்கு தீ வைத்தவர் கைது

முன்னாள் தி.மு.க. பிரமுகர் காருக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-13 17:23 GMT

முன்னாள் தி.மு.க. பிரமுகர் காருக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை குன்றக்குடி அடிகளார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவல்பூண்டி சுந்தரேசன். முன்னாள் தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டின் முன்பு கடந்த 11-ந் தேதி மாலையில் நிறுத்தப்பட்டு இருந்த காரை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதுகுறித்து சுந்தரேசன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தரேசன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரை எரித்தது திருவண்ணாமலை கோபாலநாயக்கன் தெருவை சேர்ந்த ரவிசங்கர் (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் ரவிசங்கருக்கும், சுந்தரேசனுக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக காருக்கு தீ வைத்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்