நிலக்கோட்டை அருகே மகன் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
நிலக்கோட்டை அருகே மகன் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.;
நிலக்கோட்டை அருகே உள்ள அவ்வையம்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை (வயது 75). விவசாயி. இவரது மகன் மதுரைவீரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்துபோனதில் இருந்து சின்னக்காளை மிகுந்த துக்கத்தில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது சின்னக்காளை வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.