முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்...!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Update: 2023-02-24 03:55 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்