வேடசந்தூர் அருகே கிணற்றில் விவசாயி பிணம்

வேடசந்தூர் அருகே மாயமான விவசாயி கிணற்றில் பிணமாக மிதந்தார்.

Update: 2022-05-29 15:34 GMT

வேடசந்தூர் அருகே ஆர்.புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கூனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மொராஜி என்ற ஆதப்பன் (வயது 46). விவசாயி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாகலட்சுமி, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆதப்பன் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி ஆதப்பன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே ஆதப்பன் தனக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நேற்று பிணமாக கிடந்தார். இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆதப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதப்பன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்