ராமநாதபுரம்: வலையில் சிக்கிய டால்பின்களை கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்த வனக்காப்பாளர்

டால்பின்களை கடலில் விட்ட கீழக்கரை மீனவர்களை ராமநாதபுரம் வனக்காப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டினார்.;

Update:2022-12-01 11:34 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கீழக்கரை மீனவர்களின் வலையில் சிக்கிய 2 டால்பின்களை அவர்கள் மீண்டும் கடலில் விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மீனவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீழக்கரை மீனவர்களை ராமநாதபுரம் வனக்காப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டினார். அத்துடன் அழிவின் விழிம்பில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகையை சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்