முத்தையாபுரம் அருகே காட்டுத் தீ
முத்தையாபுரம் அருகே காட்டுத் தீ பற்றி எரிந்தது;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக்நகர் அருகே உள்ள சுந்தர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நேற்று மாலை காட்டுத்தீ பரவியது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் தீ மளமள என்று எறிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே பரவிய தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.