மூலைக்கரைப்பட்டி அருகே காட்டுத்தீ
மூலைக்கரைப்பட்டி அருகே திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.;
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே திடீரென காட்டுத்தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தகவல் அறிந்த நாங்குநேரி தீயணைப்பு வீரர்களும், மூலைக்கரைப்பட்டி போலீசாரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.