மாயூரநாதர் கோவில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

மாயூரநாதர் கோவில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-07-07 18:45 GMT

மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோவில் யானையை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாயூரநாதர் கோவில்

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா பரிந்துரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் யானையை ஆய்வு செய்தனர்.

பராமரிப்பு முறைகள்

யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர். அப்போது கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்