சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

Update: 2022-11-04 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி, திருஞானசம்பந்தர், அஷ்டபைரவர் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த பாலகும்ப குருமுனி என்கின்ற தக்காயூகி தலைமையில் ஏராளமானவர்கள் சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வந்து பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி, மலைக்கோவில் (சட்டைநாதர்), அஷ்ட பைரவர் ஆகியோர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக வெளிநாட்டினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன், தன்வந்திரி, விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி ஆகிய சன்னதிகளில் வெளிநாட்டினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்