பொங்கல் விழாவில் நடனமாடிய வெளிநாட்டினர்

திருச்சுழியில் பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் நடனமாடினர்.

Update: 2023-01-13 19:03 GMT

திருச்சுழி, 

திருச்சுழியில் தை திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, திட்டஇயக்குனர் திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர். விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை வளர்ச்சி அலுவலர் அன்பரசு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினாரக இத்தாலியை சேர்ந்த ஆல்பாட்டோ, லண்டனை சேர்ந்த டாபி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு ரசித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், வளரி, பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அவர்களும் கலந்து கொண்டு நடனமாடினர். அப்போது அவர்கள் கூறுகையில், இங்கு வழங்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், உணவு ஆகியவை அருமையாக இருந்தது. இதெல்லாம் எங்கள் நாட்டில் கிடைக்காது. லண்டனில் நிகழ்ச்சிகள் நடப்பதை விட இங்கு நடந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தோம். இதனை தொடர்ந்து கோலப்போட்டி, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி பரிசுகள் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போத்திராஜ், காமேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் குலசேகரநல்லூர் சிவமாரியப்பன், மிதலைகுளம் ரோஜா செந்தில், முன்னாள் ஊரட்சி மன்றத்தலைவர் முத்துராமலிங்கம், திருச்சுழி நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்