ரூ.9¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

ரூ.9¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-10 20:17 GMT

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் வெளிநாட்டு பணத்தை சில பயணிகள் கடத்தி செல்ல முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் இருந்த பயணி ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், மதுரையை சேர்ந்த முகமது அனீஸ்(வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் சவுதி அரேபியா ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்