இரை தேடி குவியும் வெளிநாட்டு பறவைகள்

களக்காடு அருகே வெளிநாட்டு பறவைகள் இரை தேடி குவிந்து வருகின்றன.;

Update: 2023-04-28 19:08 GMT

களக்காடு:

களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் உள்ள உப்பிலாங்குளத்தில் தண்ணீர் வற்றியது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதற்கிடையே தினமும் அதிகாலையில் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கின. கடந்த சில நாட்களாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குளத்தில் தேங்கி கிடக்கும் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதற்காக வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகளை, பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்