தடைசெய்யப்பட்டபுகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
அந்தியூர்
ஆப்பக்கூடல் வேலமரத்தூர் மூனுரோடு வீரமாத்தி கோவில் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த சாக்குப்பையில் சோதனை நடத்தினார்கள். அப்போது சாக்கு பையில் சுமார் 1½ கிலோ எடைகொண்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பவானி மைலம்பாடியை சேர்ந்த சரவணன் (வயது 30) என்பதும், அவர் புகையிலை பொருட்களை கடத்தி விற்க சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.1890 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்கள்.