தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் சிக்கினர்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் சிக்கினர்.;

Update: 2023-07-02 21:26 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள அளுக்குளி குளத்து மேட்டு காலனி பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக சரஸ்வதி (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் கடையில் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஊஞ்சபாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கவுரி (37) என்பவரை போலீசார் கைது செய்து 7 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்