முத்தையாபுரத்தில்மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கானவிளையாட்டு போட்டி பரிசளிப்பு

முத்தையாபுரத்தில்மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசளித்தார்.

Update: 2023-03-12 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்திய மகளிர் தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், முத்துவேல், வட்டச் செயலாளர் கந்தசாமி, இசக்கி பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் சுபபிரியா, ஆயிஷா, ஜெபக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்