கால்நடை மருத்துவ படிப்புக்கானஇலவச ஆலோசனை முகாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான இலவச ஆலோசனை முகாம் தர்மபுரியில் நாளை நடக்கிறது.

Update: 2023-08-18 18:45 GMT

கால்நடை மருத்துவம்

டெல்லி அருகே அரியானா மாநிலம் மகேந்திர கார்ட் மாவட்டத்தில் பூமிகா கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவமனையுடன் அமைந்துள்ள இந்த கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் 5½ ஆண்டு பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். என்னும் கால்நடை மருத்துவ படிப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும். நீட் தேர்ச்சி தேவையில்லை.

இது தொடர்பாக கல்லூரி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சதீஷ் கூறியதாவது:-

இந்த கால்நடை மருத்துவம் படித்தால் அரசு கால்நடை மருத்துவர், அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய மத்திய, மாநில அரசு வேலைகளில் சேரலாம் என்பதால் மாணவ, மாணவிகளிடையே இந்த படிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவ, மாணவிகளுக்கு உயர்தர தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

ஆலோசனை முகாம்

50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வளாகம், ஹைடெக் மாட்டுப் பண்ணை மற்றும் முயல் பண்ணைகள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் கூடிய இந்த கல்லூரியில் பி.எச்.டி. முடித்த தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க முன்வந்துள்ளனர். கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி உள்பட வருட கட்டணம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மட்டுமே. இந்த கல்லூரியில் சேர வருகிற 25-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் தர்மபுரி 4 ரோடு அருகில் உள்ள ஓட்டல் சரவண பவன் மேல் மாடியில் உள்ள விஜய்ஸ் இன்போ மீடியா கல்வி அலுவலகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான இலவச ஆலோசனை முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்