14 வயதுக்கு உட்பட்டோருக்கான தூத்துக்குடி கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கான தேர்வு வருகிற 18-ந் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு, சின்னகண்ணுபுரத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடக்கிறது.
இதில் 1.9.2009 அன்றோ அதற்கு பிறகு பிறந்தவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் கிரிஸ்பினை 8015621154 தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன் தெரிவித்து உள்ளார்.