திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-30 01:53 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு தொழிற் பயிற்சி மையம் தனியார் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி மையத்தில் 2023-24 நிதியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள பாஞ்சாலி கிராமத்தில் இயங்கி வரும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஒர்த் தொழிற் பயிற்சி மையத்தில் டர்னர்- 2 ஆண்டுகள், மெஷினிஸ்ட்- 2 ஆண்டுகள், ஆர்டிகல்ச்சர்- 1 ஆண்டு, ஸ்மார்ட் போன் ஆப் டெஸ்டர்- 6 மாதம் தொழிற்பயிற்சி நடைபெறுகிறது.

இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்கல்வி, பயிற்சி கட்டணம், தேர்வு கட்டணம், சுற்றுலா கல்வி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு முற்றிலும் இலவசம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் 15 வயது முதல் 35 வயது வரை (ஆண்கள் மட்டும்) ஆகும். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தொழிற் பயிற்சி மையம், பாஞ்சாலை கிராமம் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

நாளை (வியாழக்கிழமை) வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்