தமிழகத்தில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் இன்று முதல் சர்வதேச பட்டம் விடும் திருவிழா..!!

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இன்று முதல் 15-ந்தேதி வரை ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ நடத்தப்பட உள்ளது.

Update: 2022-08-13 04:07 GMT

கோப்புப்படம்

சென்னை,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இன்று முதல் 15-ந்தேதி வரை 'சர்வதேச பட்டம் விடும் திருவிழா' நடத்தப்பட உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 4 குழுக்களும், இந்தியாவில் இருந்து 6 குழுக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக இந்த விழாவிற்காக மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலை அருகே உள்ள 15 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான மேடைகள், மின்விளக்குகள், வாகனங்கள் செல்ல சாலை வசதிகள் ஆகியவற்றை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்