கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்காக 59 சதவீத மானியத்தில் நெல் விதைகள் வழங்கப்படும் என்று வேளாண்துறை அதிகாரி தெரிவித்தார்

Update: 2022-06-02 18:05 GMT

கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னகண்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு முதல் போக சாகுபடி பணிக்காக நேற்று முன்தினம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்போக சாகுபடியில் நல்ல மகசூல் பெறும் வகையில் முற்றிலும் உகந்த நெல் ரகமான கோ - 51 சான்று பெற்ற விதைகள் தேவையான அளவு கம்பம் மற்றும் கூடலூர் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவ்விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கம்பம் மற்றும் கூடலூர் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானிய விலையில் விதைகளை பெற்று அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்து விதைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்